24h-HELPLINE 044 350 04 04

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வீட்டில் வன்முறையை அனுபவிக்கிறீர்களா? உங்களுக்கு பாதுகாப்பு தேவையா?

சூரிச் வயலெட்டா பெண்கள் காப்பகத்தில் (Frauenhaus Zürich Violetta) உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் பாதுகாப்பாக வாழலாம். பெண்கள் காப்பகத்தின் முகவரி இரகசியமானது. ஆனால் உங்கள் ஆவசர தேவைக்கு 044 350 04 04 என்ற எண்ணில் இரவும் பகலும் தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வன்முறை இல்லாத வாழ்க்கைக்கு எங்கள் பணியாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சட்ட கேள்விகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்தும் நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவோம்.

நீங்கள் நெருக்கடி நிலையில் இருக்கிறீர்களா? உடனடியாக உதவி தேவையா? காவல்துறையை அழைக்கவும்: அவசர எண் 117.

கடுமையான வன்முறை சூழ்நிலையில் காவல்துறை உங்களுக்கு உதவும். 117 என்னும் எண்ணை அழைக்கவும் (அவசர எண்).  

குற்றவாளி உடனடியாக வீட்டிலிருந்து 14 நாட்களுக்கு வெளியேற்றப்படுவார். அவர் இனி உங்கள் அருகில் வர அனுமதி இல்லை. எனவே நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வீட்டிலேயே தங்கி அடுத்த நடவடிக்கைகளைத் திட்டமிடலாம்.

குடும்ப வன்முறை பற்றி உங்களுக்கு ஆலோசனை அல்லது ஆதரவு தேவையா?

நீங்கள் மற்றும்/அல்லது உங்கள் பிள்ளைகள் வீட்டில் வன்முறையை அனுபவிக்கிறீர்களா? உங்கள் (முன்னாள்) வாழ்க்கைத்துணையால் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்படுகிறீர்களா, அச்சுறுத்தப்படுகிறீர்களா, பின்தொடரப்படுகிறீர்களா அல்லது துன்புறுத்தப்படுகிறீர்களா? இங்கே நீங்கள் ஆலோசனையைப் பெறலாம்: இலவசமாக மற்றும்  பெயர் தெரியாமல் - உளவியல், சட்ட மற்றும் சமூக ரீதியான ஆலோசனை.

 

  • பெண்களுக்கான BIF ஆலோசனை மையம்: 044 278 99 99
  • பாலியல் வன்முறை குறித்த பெண்களுக்கான ஆலோசனை மையம்: 044 291 46 46

 

பெண்கள் காப்பகத்தில் (24/7)

  • சூரிச் வயலெட்டா பெண்கள் காப்பகம் (Frauenhaus Zürich Violetta): 044 350 04 04
  • வின்டர்துர் பெண்கள் காப்பகம் (Frauenhaus Winterthur): 052 213 08 78
  • சூரிச் ஓபர்லேண்ட் பெண்கள் காப்பகம் (Frauenhaus Zürcher Oberland): 044 994 40 94